science

img

2024-ல் நிலவிற்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டம்

2024-ஆம் ஆண்டில் நிலவிற்கு மனிதர்களை மீண்டும் அனுப்ப அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா முடிவு செய்துள்ளது. 

கடந்த 1969-ஆம் ஆண்டு முதல் முறையாக நிலவிற்கு விண்வெளி வீரர்களை நாசா அனுப்பியது. இந்த திட்டம் அப்பல்லோ என்றழைக்கப்பட்டது. இந்நிலையில் நிலவிற்கு மீண்டும் விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டமிட்டு இருக்கிறது. இது குறித்து நாசாவின் நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன் கூறுகையில், நிலவிற்கு மனிதர்களை அழைத்து செல்லும் லேண்டரை உருவாக்க 3 திட்டங்கள் உள்ளன. இதற்கு 28 பில்லியன் டாலர் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. முதற்தவணையாக 3.2 பில்லியன் டாலருக்கு அரசு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவதற்கான நடவடிக்கைக்கு தயாராக உள்ளோம். என்று அவர் கூறினார்.

மேலும்  2 விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.

;